வடக்குக் கடலில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கண்டித்து வடக்கு மாகாண மீனவ அமைப்புகளால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் போராட்டத்தை ஆரம்பித்த போராட்டக்காரர்கள், யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் வரை பேரணியாக சென்று அங்கு மகஜர் ஒன்றை யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளரிடம் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து போராட்டக்கார்கள் யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக யாழ். இந்திய துணைத் தூதரகத்தைச் சென்றடைந்தனர்.

யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு 5 மீனவர்கள் அனுமதி வழங்கப்பட்டன. இதன்போது இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு பேரணியாகச் சென்று மேலதிக அரச அதிபரிடம் மகஜரைக் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள் ஆளுநருக்கான மகஜரை அலுவலக அதிகாரியிடம் கையளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here