நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை மீளவும் நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிகளை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில், அந்த திணைக்களத்தின் கீழ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நிறுவப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here