பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான வனத்தே தினுகவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் முக்கிய உதவியாளர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
10 கிராம் 550 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 35 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த நபரொருவர், மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர அவர்களின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தலின் பேரில் சாகர குலசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ், விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குழு கிராண்டிபாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.







