நோர்வூட் பிரதேசத்தில் இருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் நால்வரும் ராகமையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் காணாமல் போன நிலையில், காணாமல் போன மாணவர்களில் ஒருவரான அனூஜனின் தந்தையான ராஜ் குமார் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டு கைது செய்து அவர்களின் பெற்றோர்களிடம் மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காணாமல் போன மாணவர்கள் நால்வரும் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் அவர்கள் ராகம பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக புகையிரதத்தில் சென்றுள்ளதாகவும் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here