கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட 33 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (23.07) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம் பொலிஸாருக்கு மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்திய விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here