முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக, நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலை சமமாகவும் அதிகமாகவும் இருப்பதாக, நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக நுகர்வோர் அதிகார சபை தலையிட்டு மக்களுக்கு சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here