கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து தேசிய அருங்காட்சியகங்களும், வரும் செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மூடப்படுவதாக தேசிய அருங்காட்சியக திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் எடுக்கப்பட்டதாகவும், சுதந்திர தினம், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, தொழிலாளர் தினம் போன்ற விசேட விடுமுறை நாட்களிலும் அருங்காட்சியகங்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அருங்காட்சியகங்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்திருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here