Wednesday, July 22, 2026
No menu items!

முட்டை

முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு; நுகர்வோர் அதிருப்தி!

முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக, நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில்...

முட்டையின் விலையில் சரிவு..!

சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அண்மைய நாட்களில் விலை 26 மற்றும் 28 ரூபாவாக ஆக இருந்துள்ளது. அதன்படி, சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை குறைந்துள்ளதாக...

மயோனைஸ் விற்பனைக்கு தடை..!

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தடையை மீறிச் செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு..!

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா வரை விற்கப்படுகிறது, அதேபோல ஒரு கிலோ கோழி இறைச்சி  1,100 முதல் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், நாளை மறுநாள்...

மீண்டும் உயர்வடைந்த முட்டையின் விலை..!

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

முட்டை விலையை அதிகரிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

அண்மைக் காலமாக நாட்டில் முட்டையின் விலை குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் முட்டையின் விலையைக் குறைந்தபட்சம் 35 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முட்டையின் விலையில் வீழ்ச்சி..!

சந்தையில் இந்நாட்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் காரணமாக கோழி பண்ணை உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். மேலும் ஒரு முட்டையின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாவாக உயர்த்த வேண்டுமென கோழி பண்ணை...

மீண்டும் அதிகரித்த முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள்..!

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் மாதலி ஜெயசேகர இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்...

முட்டையின் விலையில் மாற்றமா!

கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று சந்தையில் முட்டையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி சந்தையில் முட்டையின் விலை 25 - 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img