தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (21) ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றது.

தென்னாபிரிக்கா அணி சார்பாக வியான் முல்டர் 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை ரபாடா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6ஆவது தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

தென்னாபிரிக்கா அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) உள்ளார்.

அவரை தொடர்ந்து 2 முதல் 6 இடங்கள் முறையே ஷான் பொல்லாக் (421), மக்காயா என்டினி (390), ஆலன் டொனால்ட் (330), மோர்னே மோர்கல் (309), ககிசோ ரபாடா (300) ஆகியோர் உள்ளனர்.

இதேவேளை மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையும் ரபாடா படைத்துள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here