Monday, April 20, 2026
No menu items!

தென்னாபிரிக்கா

மண்ணீரல் காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்திய ஒருநாள் அணியின் துணைத் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவலின் படி, ஸ்கேன் பரிசோதனையில் அவரது மண்ணீரலில் (Liver) காயம் இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், மருத்துவக் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் தனது...

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய கேப்டன் – சஹீன் ஷா அப்ரிடி!!

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை  வெளியிட்டுள்ளது. 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹீன், அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார். முன்னாள் தலைவர் முகமது ரிஸ்வான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு விளக்கமும்...

ICC யின் சிறந்த வீரர் விருதை இழந்த இலங்கை வீரர்..!!

ஐ.சி.சி யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக தென்னாபிரிக்காவின் எய்டன் மார்க்ரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீரருக்கான பரிந்துரையில் இலங்கையின் பெத்தும் நிசங்கவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிறந்த வீராங்கனையாக மே.இ. தீவுகளின் ஹேய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை பெறுவது 4ஆவது தடவையாகும்.

விமானத்தில் பணிப்பெண்ணைத் துன்புறுத்த முயற்சி: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயணி கைது!

டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், தென்னாபிரிக்காவை சேர்ந்த விமான பணிப்பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவர் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது,...

விமான சாகச நிகழ்ச்சியில்  ஈடுபட்ட விமானி பலி..!

தென்னாபிரிக்காவின் சால்தானா பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்டுருந்த  விமான சாகச நிகழ்ச்சியில்  ஈடுபட்ட விமானி பலியாகியுள்ளார். அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டு,. சாகசம் நிகழ்த்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் கானெல் என்ற விமானி இம்பாலா மார்க் 1 ரக விமானத்தில் உயரப் பறந்து விமானத்தை சுழற்றினார். அப்போது நிலை தடுமாறிய விமானம் வேகமாக கீழே விழுந்து நொறுங்கியது. விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து...

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று!

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பாகிஸ்தானில் உள்ள கராய்ச்சி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதேவேளை, இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி மழை காரணமாகக்...

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மோதல் இன்று..!

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. கராச்சியில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சங்கக்கார தலைமையிலான இலங்கை குழாம் அறிவிப்பு..!

கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் குமார் சங்கக்கார தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த தொடரில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 6 அணிகள்...

தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா..!

பாகிஸ்தான் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட தொடரை தென்னாபிரிக்க அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா...

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா – இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று..!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடி வரும், இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 5 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img