2023 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் பொறுப்பேற்கப்பட்ட முத்துராஜா யானையை இலங்கைக்கு மீண்டும் வழங்காதிருக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த யானை தாய்லாந்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தாய்லாந்து அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது.

அளுத்கம, கந்த விகாரையின் பாதுகாப்பில் இருந்த போது ஏற்பட்ட காயங்களினால் இந்த யானை தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் பராமரிப்பில் வைக்கப்பட்டது.

பின்னர் முத்துராஜா யானை 2023 ஆம் அண்டு தாய்லாந்துக்கு சிகிச்சைக்காக திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் முத்துராஜா யானையை இலங்கைக்கு மீண்டும் வழங்காதிருக்க தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்ற யானைகள் குறித்தும் தாய்லாந்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here