பல முன்னணி பாடசாலைகள் அதிபர்கள் இன்றி இயங்குவதாக வெளியான தகவலை அடுத்து, எதிர்வரும் நாட்களில் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள றோயல் கல்லூரி உட்பட ஏழு முன்னணிப் பாடசாலைகளும், பல்வேறு பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளும் அதிபர்கள் இன்றி இயங்கி வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாண குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்றுள்ளோம், அவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் நாட்களில் நடத்தப்படும்.
கொழும்பில் தற்போது அதிபர்கள் இன்றி இயங்கும் சில பாடசாலைகள் தேவி பாலிகா வித்தியாலயம், மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, இந்துக் கல்லூரி, இசிபதன கல்லூரி, லும்பினி வித்தியாலயம் மற்றும் பிலியந்தலை மத்திய கல்லூரி. கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி, காலி சங்கமித்த கல்லூரி, அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயம், வீரகெட்டிய ராஜபக்ஷ வித்தியாலயம், அனுராதபுரம் மத்திய கல்லூரி என ஏனைய பிரதேசங்களிலுள்ள 46 பாடசாலைகளிலும் அதிபர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கல்வி அமைச்சு தீர்வை வழங்குமாறு சிபாரிசு செய்யுமாறு வலியுறுத்தி, ஆறு தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை அதிபர்கள் அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சில வகை அதிகாரிகள் உரிய நடைமுறைகளை மீறி அதிபர்களாக நியமிக்கப்பட்டமை, தரம் ஒன்றுக்கு தரம் உயர்த்தப்படும் போது அதிபர்களின் அடிப்படை சம்பளத்தை குறைத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை அதிபர்கள் எதிர்கொள்வதாக முறைப்பாட்டில் அவர்கள் கூறியுள்ளனர்.
தரம் இரண்டு, மற்றும் அதிபர்களுக்கு தேவையான தகுதிகள் இருந்தாலும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அமைச்சகம் செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.








