2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காது கடமையை புறக்கணித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
நீதிபதி பிரியந்த லியனகே தீர்ப்பு வழங்குகையில், “பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தும் 268 பேர் கொல்லப்பட்டு 586 பேர் காயமடைய காரணமாக இருந்துள்ளார்” என கூறினார்.
எனினும் வழக்கில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி விராஜ் வீரசூரிய, குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதே வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கான தீர்ப்பும் விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








