2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற “ரடம எகட்ட” தேசிய நடவடிக்கை தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 2025 ஆம் ஆண்டில் ரூபா மில்லியன் 1,549 பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் 2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் ரூபா மில்லியன் 772 பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் “ரடம எகட்ட” தேசிய நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் தொடர்பான சந்தேகநபர்கள் 239,384 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் வியாபாரிகள் 995 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர்கள் 378 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 3,287 பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை “ரடம எகட்ட” தேசிய நடவடிக்கை அமுல்படுத்தப்பட்ட கடந்த 9 மாதங்களில் ஹெரோயின் 2,253 கிலோ 834 கிராம், ஐஸ் 2,640 கிலோ 695 கிராம் மற்றும் கொக்கெய்ன் 293 கிலோ 732 கிராம் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here