நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எழுப்பியுள்ள கவலைகளுக்கு பிரெஞ்சு தேசிய சட்ட சபை (CNB) முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
2026 ஜூலை 3 அன்று பெரிஸில் இடம்பெற்ற பிரெஞ்சு தேசிய சட்ட சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவு, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் எந்த அரசியலமைப்பு சீர்த்திருத்தமும் ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் உரிய நடைமுறைக்கு அமைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரெஞ்சு தேசிய சட்ட சபை வலியுறுத்தியது.
இதேவேளை பொதுநலவாயநாடுகளின் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையும்,தற்போது முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களுடன் அடுத்த நகர்வுகள் அமைய கூடாது என இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியது.








