முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதியில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள தேக்கங்காடுகள் நேற்று(27) மாலை தொடக்கம் தீயில் எரிந்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்றது இந்த நிலையில் குறித்த தேக்கங்காட்டு பகுதி பற்றி எரிந்து வருகின்றது இது விசமிகளால் வைக்கப்பட்ட தீயா அல்லது தீவிபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

சுமார் 6 ஏக்கர் வரையான தேங்கங்காடுகள் தீயில் எரிந்து வருகின்றன தேக்கமரத்தின் இலைகள் விழுந்து காய்ந்த நிலையில் காணப்பட்டதான் காரணமாக எரிபற்று நிலையில் உள்ள சருகுகள் பக்கெண தீ பற்றி கொண்டு எரிந்து சென்றுள்ளன.

இந்த தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இல்லாத நிலை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது அண்மையில் கூட முள்ளியவளை பகுதியில் வீடு ஒன்று தீ பற்றிக்கொண்டதால் அதனை அணைக்கமுடியாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here