சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், இலங்கையின் எரிபொருள் விலை நிர்ணயம் இம்மாத இறுதியில் மீண்டும் சர்வதேச விலைகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தற்போது உள்நாட்டில் எரிபொருள், உலக சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்கப்படுகிறது. ஆனால் தனியார் விநியோகஸ்தர்கள் தொடர்ந்து இந்த நிலைமையில் செயல்பட முடியாது என பலமுறை எச்சரித்துள்ளனர். இந்த நிலைமையை கையாள்வதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக அமைச்சர் கூறினார்.

சாத்தியமான விலை நிர்ணய முறைகளை விளக்கிய அமைச்சர் கருணாதிலக்க, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் , அதிகரிக்கும் சர்வதேச விலைகளிலிருந்து நுகர்வோரை பாதுகாக்க அரசாங்கம் தலையிட்டது.

இதேவேளை எரிபொருள் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை வரம்பை நிர்ணயித்து, அந்த வரம்புக்குள் அவர்கள் விற்க அனுமதிக்க முடியும்.

“இவை அனைத்தையும் நாங்கள் பரிசீலித்து ஒரு முடிவை எடுப்போம். எரிபொருள் நுகர்வோரின் நலன்களும், தனியார் நிறுவனங்களின் குறைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு மலிவு விலையை உறுதி செய்வதற்கும், எரிபொருள் விநியோகத்தின் நிலைத்தன்மைக்கும் இடையே சமநிலையை பேணுவதில் அரசாங்கம் கவனமாக இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார். சர்வதேச சந்தை போக்குகள் மற்றும் உள்ளூர் கவலைகள் இரண்டையும் மறுஆய்வு செய்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here