2025 பாதீடு விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உட்புற விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேசை பந்தாட்ட போட்டியில் பெண்களுக்கான போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி முதலாம் இடத்தையும் , அவருடன் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரனி கிரியெல்ல இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
அத்துடன், நிலாந்தி கொட்டாஹச்சி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இரட்டையர் மேசைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, விளையாட்டு நிகழ்வின் ஏற்பாட்டாளர் நளின் பண்டார, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின் தலைமையில் பரிசில்கள், வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.








