மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டுப் பெறாத பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தை மீறும் நடத்துனர்கள் மூன்று நாள் இடைநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படுவார்கள். அதேபோல் பயணச்சீட்டுகளைத் தங்கள் வசம் வைத்திருக்காத பயணிகளும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்குவது கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 14 நாட்களில், பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கல் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரசபை ஆய்வுகள் நடத்தியது.

அந்த காலகட்டத்தில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கும், பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்களுக்கும் எச்சரிக்கைகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.

இருப்பினும், சட்டத்தை மீறும் பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிரான சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் நேற்று (அக்டோபர் 14) முதல் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here