காலி – அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெவேகொடவத்தை பகுதியில் உள்ள வீட்டொன்றை இலக்காகக் கொண்டு இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை எனவும், இதுபற்றி மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.







