பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து பல்வேறு மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.

இன்று மதியம் 2 மணியளவில் காரைநகர் கதிர்காம சுவாமி முருகன் கோவிலில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, கட்சி அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வேலனை துறையூர் ஐயனார் சனசமூக நிலைய முன்றல், கோப்பாய் நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் கோவில், பருத்தித்துறை கொட்டடி கடற்கரை ஆகியவற்றிலும் மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளார்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here