சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ். தொழிநுட்பக்கல்லூரியில் 18 வயதினை நிறைவுசெய்த மாணவர்களுக்கான வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்ச்சியொன்று இன்று யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் சரஸ்வதி மண்டபத்தில் மாவட்ட இணைப்பாளர் எஸ்.தினேஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் விதம், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் விதம், வாக்களிக்கும் நேரங்கள், வாக்குகள் நிராகரிக்கப்படுகின்றது மற்றும் வாக்காளர் அட்டையின் முக்கியத்துவம், தேர்தல் கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள், ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச நாடுகளின் அவதானம் என்பன தொடர்பாக தெளிவூட்டப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here