யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா தம்பதிகளின் 14 மாதங்கள் நிரம்பிய  குழந்தை நேற்றைய தினம் காய்ச்சல் காரணமாக  உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலில் காணப்பட்ட நிலையில் நேற்று(05) காலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிற்பகல் உயிரிழந்துள்ளது.

மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here