யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (1) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், சிவிகே சிவஞானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ, யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன் போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் 60ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவுச் சின்னமாக முத்திரை மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது.

(யாழ் நிருபர்- லோயன் விஜய்குமார்)








