யாழ்ப்பாணத்தில் காதலி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்து 50ஆவது நாளில் காதலனும் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் காதலியை இழந்த துயரத்தில் இருந்து வெளிவர முடியாமல் அவரது இல்லத்தில் நேற்றையதினம்(09) தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.







