யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நவீன உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு 170 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதற்கும், இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை ஊக்குவிப்பதற்கும் இந்த உள்ளக விளையாட்டரங்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here