2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்பதாலே, ஜனாதிபதி பாதீட்டை வாசித்தபோது தாம் நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்று (11) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா,

“நேற்று நிசாம் காரியப்பர், நான் சபையில் தூங்கியதாக கூறியிருந்தார். அது என் தனிப்பட்ட விஷயம். ஆனால் உண்மையில், பாதீடு வடக்கு மக்களுக்கான எதையும் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் எனக்கு அதில் ஆர்வமே இருக்கவில்லை,” என்று கூறினார்.

அவர் மேலும், “நான் சபைக்கு வந்ததும் பாதீட்டை முழுமையாக வாசித்தேன். அதில் என்ன இருக்கிறது என எனக்குத் தெரியும். ஆனால் வடக்கு மாகாணம் குறித்து எந்தத் திட்டமோ, ஒதுக்கீட்டோ குறிப்பிடப்படவில்லை. எனவே அது எனக்கு சம்பந்தப்படாத விஷயமாக இருந்ததால் தான் தூங்கினேன்,” என்று சிரித்தபடி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here