பெலியத்தவிலிருந்து மருதானைக்குச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில், வட்டுவ ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், இன்று காலை (24) கடலோர ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து களுத்துறை வரையிலும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் தடம் புரண்டமை இரு தண்டவாளங்களையும் தடுத்துள்ளதால், கடலோர நெடுந்தூர சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன,எனினும் முழுமையான சேவைகள் மீண்டும் தொடங்கும் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here