யாழ்ப்பாணம் மாநகர சபையின் உழவு இயந்திரத்தில் திண்மக் கழிவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்போது, உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இதனால் வீதிகளில் குப்பைகள் கொட்டிச் செல்லப்படுவதாகவும், மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயற்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இன்றைய தினமும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது உரிய பாதுகாப்பு முறைமை பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here