குடிநீர் போத்தலை நிர்ணய விலைக்கு மேல் விற்பனை செய்த நிறுவனத்துக்கு 750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் குடிநீர் 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள, நிலையில் அந்த உணவகம் 130 ரூபாவிற்கு அதனை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் குறித்த நிறுவனம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டது.
காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை, நிர்ணய விலையை மாற்றியமைத்தல், போன்ற குற்றங்களுக்காக பல கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 230,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் நீதிமன்றம் 1,300-க்கும் மேற்பட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை அழிக்க உத்தரவிட்டது.








