புத்தளம் கரடிப்பூவல் பிரதேசத்தில் புத்தளம் – எலுவன்குளம் ரயில் மார்க்கத்தில் ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய காட்டு யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

புத்தளம் பிரதேசத்தில் உள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றிற்கு சுண்ணாம்புக் கற்களை கொண்டு சென்ற சரக்கு ரயிலில் மோதியே இந்த காட்டு யானை உயிரிழந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here