இலங்கை ரயில்வே சேவை, முதன்முறையாக பயணிகள் (இணையம்) ஒன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யக்கூடிய புதிய டிஜிட்டல் டிக்கெட் தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரவேஷா (Pravesha) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையை http://www.pravesha.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் பிரவேஷா Pravesha மொபைல் செயலி ஊடாக அணுக முடியும்.
பயணிகள் தங்கள் பயண விபரங்களை உள்ளிட்டு கடன் அல்லது பற்று அட்டை (Credit / Debit Card) மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை இணையத்தில் கொள்வனவு செய்யலாம்.
கொள்வனவு பூர்த்தியானதும், மின்னணு டிக்கெட்டுக்கள் (e-ticket) SMS அல்லது மின்னஞ்சல் மூலம் உடனடியாக வழங்கப்படும்.
ரயில் நிலையங்களிலும் ரயில்களுக்குள்ளும் e-டிக்கெட்டில் காட்டப்படும் QR குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட்டுக்களை சரிபார்க்க முடியும்.
பொது போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.







