பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயிலின் கண்காணிப்பு பெட்டி தடம் புரண்டுள்ளது.
இதனால் மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இன்று (24) மதியம் 12.30 மணியளவில் இந்த தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடம் புரண்ட ரயிலை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ரயில் தடம் புரண்டதால் ரயில் பாதைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.








