மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பதவியில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஆளுநராக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், மேல் மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும், மாகாணத்தின் பொது சேவைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தான் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here