இலங்கையின் வங்கிகளுக்கு மத்தியிலான அந்நியச் செலாவணி சந்தையில்,நேற்றைய நிலவரப்படி 350 ஆக இருந்த ரூபாவின் நடுநிலை மதிப்பு, இன்று 330 ரூபாவாகக் குறைந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஏல விலை 327 ரூபாவாகவும், எதிர்பார்க்கப்படும் விற்பனை விலை சுமார் 332 ரூபாவாகவும் உள்ளதாகக் கூறிய அவர், இந்த முன்னேற்றத்தை “பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி” என விபரித்தார்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நுகர்வோருக்கு நிவாரணம் அளித்தாலும், சில சமயங்களில் அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது வணிக லாபத்திற்காகவோ, அதன் மதிப்பு ரூ. 360 அல்லது ரூ. 400 வரை மேலும் குறையும் என்று எதிர்பார்த்திருந்த சில தரப்பினரை இது கலக்கமடையச் செய்யலாம் என பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு எடுக்கப்பட கூடாது எனவும் அவர் எச்சரித்தார். அத்தகைய நடவடிக்கைகள் வாகன இறக்குமதியில் மட்டுமன்றி, அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளிலும் இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்கம் உண்மை நிலவரங்களின் அடிப்படையிலான கொள்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மத்திய வங்கி, முறையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

முந்தைய நெருக்கடியின் போது, ​​தவறான தகவல்கள் எவ்வாறு பொருளாதார ஸ்திரத்தன்மையை மோசமாக்கியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர், மேலும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை நம்புமாறு வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here