நேற்று(31.03.) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 168 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அதன் புதிய விலை 1,645 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here