வெலிகந்த – சிங்கபுர வீதியில் முதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (16.09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் பயணித்த லொறி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கமாக திரும்பி எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது, இரு வாகனங்களினதும் சாரதிகள் காயமடைந்துள்ள நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here