கிளிநொச்சி A9 வீதியில் இன்று (27.08) லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன், அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக பஸ் ஒன்று தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸை முந்திச் சென்ற வேளையில் அதே திசையில் பயணித்த லொறியொன்று குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லொறியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








