இலங்கை கடற்பரப்பினுல் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (27.08) உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் நேற்று(26.08) இரவு சட்ட விரோதமாக ஒரு விசைப் படகுடன் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் குறித்த 8 மீனவர்களையும் கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து இன்று (27.08) மதியம் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (27.08) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here