வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட இரு மாணவர்கள் மீது லொறி மோதியதில் குறித்த மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் இருவரும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துடன் சம்மந்தப்பட்ட லொறியின் சாரதி  வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here