பாரிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியாவின் லொஸ் ஏன்சலிஸ் பகுதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (1/25/2025) பயணித்துள்ளார்.
அங்கு அழிவுக்குள்ளாகியுள்ள பகுதிகளின் அளவை மதிப்பிடுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியாவில் மீண்டும் காட்டுத் தீ பரவி வருகின்ற நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அங்கு பயணித்துள்ளார்.
லொஸ் ஏன்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயானது 79 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கலிபோர்னியா – லொஸ் ஏஞ்சலீஸில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 28 பேர் இதுவரை உயிரிழந்தனர்.







