வட மாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டம் இணைய தலைவர் N.V.சுப்பிரமணியம் தலைமையில் காலை 11:30 மணியளவில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.
மங்கள சுடர்களை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் ஹேர்மன் குமார, இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம்,செயலாளர் முகமட்ஆலம். பொருலளார் பிரியா.சிறிவிமூர்த்திபெண்கள் அமைப்பின் தலைவி சுபாசினி மாவட்ட தலைவர்கள் சார்பாக யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன், இணைப்பாளர்கள் சார்பாக மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்பு உரை என்பன இடம் பெற்று மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதில் வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தை பிரதிநித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் ஹேர்மன்குமார, அதன் பிரதிநிதி செல்வி சுபாஜினி, மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,மன்னார்.கிளிநொச்சி மாவட்டங்களின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மீனவர் நலன்சார்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டுள்ளன.










