வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே.குமார இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.








