கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (27) 126.81 புள்ளிகளால் அதிகரித்தது.
அதன்படி, வர்த்தக முடிவில், ஏஎஸ்பிஐ முதல் முறையாக 17,044.67 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.
S&P SL20 சுட்டெண் 25.25 புள்ளிகளால் அதிகரித்து, 5,145.37 புள்ளிகளைப் பதிவு செய்தது.
இன்றைய வர்த்தக விற்றுமுதல் ரூ. 5.93 பில்லியன்.







