இலங்கையில் இந்த வருடம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 306, 264 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 997,858 ஆக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்று இந்த எண்ணிக்கை 13,14,122 ஆக அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் மற்றைய வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 11,82,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 131,910 ஆகவும் அதிகரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here