ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு வழங்கும் நடைமுறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
முப்படை வீரர்களின் ரேஷன் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அவர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதுடன், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.








