தொடருந்து தடம்புரண்டமையால் பாதிப்படைந்திருந்த பிரதான மார்க்கத்திலான தொடருந்து போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் அதனூடான தொடருந்து சேவைகளில் தாமதம் நிலவுவதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா தொடருந்து நிலையத்துக்கு அருகே கொழும்பிலிருந்து மீரிகம நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று நேற்று பிற்பகல் (23) தடம்புரண்டது.

இதன் காரணமாக பொல்கஹாவெலயில் இருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் தொடருந்து சேவை பாதிப்படைந்திருந்தது.

எவ்வாறாயினும் அந்த மார்க்கத்தில் தற்போது தொடருந்து போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here