அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடு முழுவதும் சேதமடைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களை மீளமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

மத்திய, ஊவா, வடமேல், சபரகமுவ, மேல், தென், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏராளமான பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல மக்கள் அனர்த்தத்தின்போது இந்த மதஸ்தலங்களில் தஞ்சம் புகுந்ததைக் குறிப்பிட்டு, உடனடி அரசாங்க ஆய்வை மேற்கொண்டு, மீளமைக்கும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அனைத்து பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை சீரமைப்பதில் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு உதவுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிராந்திய அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here