நேற்றைய தினம் இரவு வவுனியா விளக்கு வைத்த குளம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஹையேஸ் ரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது, அதே திசையில் பயணித்த ஹையேஸ் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here