வவுனியா பூம்புகார் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தகவலின்படி, உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த இ. சிந்துஜா (வயது 25) என்பவர் ஆவார். அவர் ஒரு குழந்தையின் தாயாகியுள்ளார்.

சம்பவம் இன்று (04) இடம்பெற்றது. சிந்துஜா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்த பெண்ணின் தாயார் மாலை வீட்டிற்கு திரும்பியபோது மகளின் சடலத்தை கண்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கழுத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயம் காணப்பட்டதால் இது கொலைச் சம்பவம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, பெண்ணின் கணவரும் அவர்களின் இரண்டு வயது பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here